அமெரிக்காவின் டூவின் ஃபால்ஸ் நகரில் துப்பாக்கிச்சூடு: கொல்லப்பட்ட 3 பேர், இருவர் காயம்
ஐடஹோ மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்தில் உள்ள டூவின் ஃபால்ஸ்(Twin Falls) என்ற இடத்தில் அரங்கேறிய கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
உள்ளூர் நகராட்சி அதிகாரிகளின் தகவல் படி மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
தாக்குதலை யார் நடத்தினார்கள்? அல்லது துப்பாக்கிச் சுட்டிற்கான பின்னணி காரணம் என்ன? என்பதை இதுவரை பொலிஸார் வெளியிடவில்லை.
இந்த பயங்கரமான துப்பாக்கிச் சூடு சம்பவமானது, புளூ லேக்ஸ் பவுல்வர்ட் நார்த்(Blue Lakes Boulevard North) என்ற பகுதியில் அமைந்துள்ள பரபரப்பான வணிக வளாகத்தில் நடைபெற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக அங்குள்ள In-N-Out Burger என்ற இடத்தின் வளாகத்திற்கு நிகழ்ந்துள்ளது.
தாக்குதலை தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அப்பகுதியில் இருந்த வணிக நிறுவனங்கள் தங்களது கடைகளை தற்காலிகமாக மூடியுள்ளனர்.
அதே நேரத்தில், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |