ஒன்லைன் வகுப்பில் பங்கேற்ற பூனைக்கு வாழ்த்து தெரிவித்த பல்கலைக்கழகம்! அமெரிக்காவில் நடந்த வேடிக்கை சம்பவம்
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று, தனது உரிமையாளருடன் ஒவ்வொரு ஜூம் கால் வகுப்பிலும் கலந்துகொண்ட பூனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது கல்லூரி வகுப்புகளின் பெரும்பகுதியை வீட்டிலேயே செலவிட வேண்டிய கட்டாயத்தில் இருந்த பிரான்செஸ்கா போர்டியர் (Francesca Bourdier), கோவிட் தொற்று பரவலின் போது ஓன்லைன் வகுப்புகளுக்கு ஜூம் பயன்பாட்டைப் பயன்படுத்தினார்.
"பெரும்பாலான நேரம் நான் என் வீட்டில் இருந்தேன், என் அருகில் என் பூனை இருந்தது. நான் எனது ஜூம் விரிவுரையை கவனிக்கும் போதெல்லாம், பூனையும் அதைக் கேட்க விரும்புவதைப் போல இருக்கும், அவள் எப்போதும் என் அருகில் மடிக்கணினி முன் அமர்ந்திருப்பாள்" என்று பிரான்செஸ்கா போர்டியர் கூறுகிறார்.
உணவு டெலிவரி ஏஜென்டை கன்னத்தில் அறைந்த போக்குவரத்து கான்ஸ்டேபிள் கைது! இணையத்தில் வைரலான காட்சி
பட்டப்படிப்பு என்ற மைல்கல்லை தான் தனியாக எட்டவில்லை என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், இன்ஸ்டாகிராமில், "நான் பங்கேற்ற ஒவ்வொரு ஜூம் விரிவுரையிலும் எனது பூனை கலந்து கொண்டது, எனவே நாங்கள் இருவரும் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவோம்" என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.
போர்டியர் பட்டப்படிப்பு பட்டம் வாங்கும்போது அணியக்கூடிய உடையை, தனக்கு மட்டுமின்றி, சுகி (Suki) எனும் தனது பூனைக்கும் சொந்தமாக தொப்பி மற்றும் கவுனை வாங்கி அணிவித்துள்ளார்.
தன்னுடைய பூனை எந்த பட்டப்படிப்பு பட்டமும் பெறவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் தன்னுடன் ஒன்லைன் வகுப்பில் கலந்துகொண்டதற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.