புதிய AI போர்க்கப்பலை அறிமுகப்படுத்திய அமெரிக்கா., மிரளவைக்கும் பயன்பாடுகள்
அமெரிக்கா அதன் புதிய AI போர்க்கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா உலகின் முதல் 44 டன் எடையுள்ள, செயற்கை நுண்ணறிவால் (AI) இயங்கும் போர்க்கப்பலான AIRCAT Bengal MC-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இது 1,150 மைல்கள் (1,000 கடல் மைல்கள்) நீள தூரம் ஓய்வின்றி பயணம் செய்யும் திறன் பெற்றுள்ளது.
இந்த மேம்பட்ட போர்க்கப்பல் Eureka Naval Craft, அவுஸ்திரேலியாவின் Greenroom Robotics, மற்றும் ESNA கப்பல் வடிவமைப்பாளர்களின் ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது 36 மீட்டர் நீளம் கொண்ட Surface Effect Ship (SES) வகையைச் சேர்ந்தது.
AIRCAT Bengal MC ஒரு நேரத்தில் 44 டன் பாரத்தை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இது இரண்டு பாரிய 40 ISO கன்டெய்னர்களை ஏற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், அதிகபட்சமாக 50 knots (93 கிமீ/மணி) வேகத்தை அடையக்கூடியது.
இந்த போர்க்கப்பல் Tomahawk மற்றும் Naval Strike Missiles (NSM) ஏவுகணைகளை ஏவ முடியும். இதன் மூலம் இது தற்காலிக கடல்சார் போராளி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கப்பலை பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்த முடியும்: படைவீரர்களை கொண்டு செல்ல, ஒரு தரையிறங்கும் ஆதரவு படகாக, மின்னணு போர் தளமாக, drone mothership-ஆக, கண்ணிவெடி இடுதல் மற்றும் கண்ணிவெடி எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள போன்றவற்றிற்காக பயன்படுத்தலாம்.
Greenroom Robotics உருவாக்கிய GAMA நவீன automatic Navigation அமைப்புடன், இந்த கப்பல் மனிதர்கள் இல்லாமல் செயல்படக் கூடியது.
இது அமெரிக்கக் கடற்படை, AUKUS கூட்டாண்மை நாடுகள் மற்றும் ஆசிய நாட்டு கடற்படைகளுக்குப் பெரும் பலமாக அமைய வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
AIRCAT Bengal MC, US AI Warship, Autonomous Warship, 44-ton Warship USA, Next-gen naval technology, AI naval ships, Surface Effect Ship AIRCAT, Eureka Naval Craft warship, Greenroom Robotics naval, US Navy new warship 2025, AI-driven warship, AIRCAT Bengal missile ship, Modern naval warfare USA