இலங்கையில் இருக்கும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா! எதற்காக தெரியுமா? முழு விபரம்
இலங்கை செல்ல விரும்பும், மக்களுக்கு அமெரிக்க நோய் தடுப்பு மையம் எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இலங்கையில் இருக்கும் அமெரிக்கா தூதரகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,இலங்கையில் உள்ள அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இலங்கையில் கொரோனா தீவிரமாக இருக்கிறது.
ஏற்கனவே இலங்கை செல்ல விரும்பும் மக்களுக்கு அமெரிக்கா நோய் தடுப்பு மையம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளதால், அதை பின்பற்றுங்கள். கொரோனா மட்டுமின்றி, இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.
சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், ஷாப்பிங் மால்கள், மார்க்கெட்டுகள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், உணவகங்கள், மன்றங்கள், விளையாட்டு, கலாச்சார மற்றும் கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதால், மக்கள் மிகவும் கவனமுடன் எச்சரிக்கையுடன் இருக்கும் படி கூறப்படுகிறது.
இலங்கையின் தொலை தூர பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அவசர கால உதவிகளை வழங்க குறைவான வளங்களே இருக்கிறது.
அதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று, தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 267 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.