துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகள் மொத்தம் ஈரான் போரில் பயன்படுத்திய அமெரிக்கா
ஈரானுடனானப் போரின் போது அதிதுல்லியமான நீண்ட தூர ஏவுகணைகள் மொத்தம் பயன்படுத்திய அமெரிக்கா.
அமெரிக்க இராணுவம், ஈரானுடனான தனது ஐந்து மாதப் போரின் போது, உலகம் முழுவதும் உள்ள தனது அதிதுல்லியமான நீண்ட தூர ஏவுகணைக் கையிருப்பில் பெரும்பகுதியைப் பயன்படுத்தியுள்ளது.
கையிருப்பில் இல்லை
இந்த ஏவுகணைகள் முதன்மையாக அமெரிக்க இராணுவத்தின் தரைக்குத் தரை பாயும் ஆயுதங்களாகும்; இவை இராணுவ உத்திசார் ஏவுகணை அமைப்புகள் (ATACMS) மற்றும் துல்லியத் தாக்குதல் ஏவுகணைகள் (PrSM) என அழைக்கப்படுகின்றன.

அமெரிக்க இராணுவம் இந்த ஆயுதங்கள் அனைத்தையும் ஏறக்குறைய பயன்படுத்தியுள்ளதாகவே தகவல் கசிந்துள்ளது. உண்மையில் தற்போது அமெரிக்க இராணுவத்திடம் ATACMS எதுவும் கையிருப்பில் இல்லை.
நீண்ட தூர ஏவுகணைகள் ஒவ்வொன்றின் மதிப்பு 1 மில்லியன் டொலராகும். வலிமையான ஒரு ராணுவத்தின் முக்கியமான அம்சமாகும் இந்த ஏவுகணைகள்.
பாதுகாப்பான தூரத்திலிருந்து துல்லியமாகத் தாக்க அனுமதிக்கும் ஏவுகணைகள் இவை. உக்ரைன் போரில் அமெரிக்கா வழங்கிய ATACMS ஏவுகணைகள் முக்கியப் பங்கு வகித்துள்ளது.
ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க உக்ரைனியப் படைகளுக்கு இது பேருதவியாக இருந்துள்ளது. PrSM என்பது ஒரு புதிய, மிகவும் மேம்பட்ட தலைமுறை ஏவுகணையாகும், இது குறைந்த வரம்பு கொண்ட ATACMS-க்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், துல்லியமாகத் தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதால், ஈரான் மீது மீண்டும் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த நேரிட்டால், அதிக ஆபத்துகள் நிறைந்த, விமானிகள் இயக்கும் குண்டுவீச்சு நடவடிக்கைகளையே அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை வரும்.
காஸா மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கொடூரமானத் தாக்குதல் போன்ற சூழலை அமெரிக்காவும் முன்னெடுக்க வழிவகுக்கும். ஈரானுடனான இந்த மோதல் குறுகிய காலமே நீடிக்கும் என்று கணித்ததன் அடிப்படையில், ட்ரம்ப் பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீதான போரைத் தொடங்கினார்.
ஆனால் ஈரானுடனான இந்த மோதல் 5 மாதங்களாக நீடிக்கிறது. தற்போது மிக முக்கியமான ஏவுகணைகளின் கையிருப்பும் மொத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஏவுகணை இருப்புகள் குறைந்துள்ளது, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட எதிரிகளைத் தடுத்து நிறுத்தும் அமெரிக்காவின் திறனைக் கட்டுப்படுத்தக்கூடும் என்றே அஞ்சப்படுகிறது.
ஆனால், உலகில் உள்ள எந்த நாட்டை விடவும், தங்களுக்குத் தேவைப்படுவதை விடவும் மிக அதிக அளவிலான ஏவுகணைகள் மற்றும் ஆயுத இருப்பை அமெரிக்கா கொண்டுள்ளது என்று ட்ரம்ப் கூறியதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
65 சதவீத 'பேட்ரியாட்' (Patriot)
உண்மையில், ட்ரம்பின் பேச்சுக்களில் எப்போதும் உண்மை இருந்ததில்லை என்றே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. பீரங்கி குண்டுகள் மற்றும் பல்வேறு வகையான ஏவுகணைகள் உள்ளிட்ட சில ஆயுதங்கள் சாதனை அளவுகளில் உற்பத்தி செய்யப்படுவதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்; அதேவேளையில், நீண்ட காலப் போருக்குத் தேவையான அளவை விட இவற்றின் இருப்பு குறைவாக இருக்கக்கூடும் என்றே அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நிலையில், பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 65 சதவீத 'பேட்ரியாட்' (Patriot) இடைமறிப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுவிட்டதாகவும், அமெரிக்காவின் கையிருப்பில் உள்ள 'தாட்' (THAAD) பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிப்பான்களின் எண்ணிக்கை போர் தொடங்கிய சமயத்தில் இருந்ததை விடக் குறைந்தது 38 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் CSIS கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

'பேட்ரியாட்' (Patriot) மற்றும் 'தாட்' (THAAD) ஆகியவை, உள்வரும் ஏவுகணைகளைக் கண்டறிந்து அழிக்கும் அமைப்புகளாகும்; இவை நாட்டின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் மிகச் சிறந்த அமைப்புகளில் அடங்கும்.
மேலும், போர் தொடங்கியதிலிருந்து, பொதுவாகக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் டோமாஹாக் குரூஸ் ஏவுகணைகளின் உலகளாவிய இருப்பில் பாதிக்கும் சற்றுக் குறைவான அளவை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |