உக்ரைனை ஆக்கிரமித்தால்.. ரஷ்யாவை எச்சரிக்கும் கமலா ஹாரிஸ்!
ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யா மீது "முக்கியமான மற்றும் முன்னோடியில்லாத" பொருளாதார நடவடிக்கைகளைத் திணிக்கும் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சனிக்கிழமை எச்சரித்துள்ளார்.
ஜேர்மனியின் முனிச் நகரில் உலக தலைவர்களுடனான வருடாந்திர பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், ரஷ்யா "தேசிய எல்லைகளை வலுக்கட்டாயமாக மாற்றக்கூடாது" என்று கூறினார்.
"ரஷ்யா மேலும் உக்ரைன் மீது படையெடுத்தால், எங்கள் நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுடன் சேர்ந்து, குறிப்பிடத்தக்க மற்றும் முன்னோடியில்லாத பொருளாதார செலவினங்களை சுமத்தும்," என்று அவர் கூறினார்.
மேலும் "விரைவான, கடுமையான மற்றும் ஒன்றுபட்ட பொருளாதார நடவடிக்கைகளை நாங்கள் தயார் செய்துள்ளோம்" என்று ஹாரிஸ் மேலும் கூறினார்.
"நாங்கள் ரஷ்யாவின் நிதி நிறுவனங்கள் மற்றும் முக்கிய தொழில்களை குறிவைப்போம்" என்றார். வாஷிங்டன் பொருளாதார நடவடிக்கையுடன் நின்றுவிடாது, நேட்டோவின் கிழக்குப் பகுதியை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சுமுக பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கமலா ஹாரிஸ் மேலும் கூறினார், ஆனால் ரஷ்யா சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக உள்ளது என்றார்.