அமெரிக்க துணை ஜனாதிபதி வீட்டின் மீது தாக்குதல்: சந்தேக நபர் அதிரடி கைது
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸின் ஓஹியோ வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி வீட்டில் தாக்குதல்
ஓஹியோ மாகாணத்தின் சின்சினாட்டி நகரில் அமைந்துள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸின் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலின் போது ஜே.டி வான்ஸின் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை என்றும், அதே சமயம் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் யாரும் ஜே.டி வான்ஸின் வீட்டிற்குள் நுழைய வில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்ம நபர்களின் இந்த தாக்குதல் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா என்று புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மர்ம நபர் ஒருவர் கைது
இந்நிலையில் இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
AP/Hamilton County Justice Center
ரகசிய விசாரணை அதிகாரிகள் வழங்கிய தகவல் படி, துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் வீட்டின் ஜன்னலை சுத்தியலை கொண்டு உடைத்து வீட்டுக்குள் நுழைய முயன்றதாக தெரியவந்து இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |