கமலா ஹாரிஸ் சென்ற கார் விபத்து.! சம்பவத்தை மறைக்க முயன்ற அதிகாரிகள்., அமெரிக்க ரகசிய சேவை விளக்கம்
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சம்பந்தப்பட்ட கார் விபத்தை ரகசிய சேவை மூடிமறைத்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஆக்டொபர் 3, திங்கட்கிழமை, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சென்ற கார் சிறிய விபத்தை எதிகொண்டதாகவும், ஆனால் இந்த சம்பவம் முதலில் இயந்திர கோளாறு என்று ரகசிய சேவை அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இரகசிய சேவை இயக்குநர் கிம் சீட்டில், இந்த சம்பவம் முதலில் இயந்திரக் கோளாறு என்று விவரிக்கப்பட்டதாகக் கூறினார்.
[HUJQ47 ]
அனால், கமலா ஹாரிஸை ஏற்றிச் சென்ற வாகனம் வெள்ளை மாளிகைக்கு சென்று கொண்டிருந்த நிலையில், ஒரு சுரங்கப்பாதைக்குள் செல்லும்போது, அந்த வாகனத்தின் சாரதி காரை வேகமாக திருப்பியதால், பக்கவாட்டு தடுப்பின் மீது டயர் மோதியது.
இதனால், அந்த தயார் உடனடியாக மாற்றப்படவேண்டியதால், காருக்குள் இருந்த கமலா ஹாரிஸ் அந்த வாகனத்திற்கு முன் நின்ற மற்றோரு காருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதையடுத்து மோட்டார் அணிவகுப்பு அதன் இலக்கைத் தொடர்ந்தது என்றும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
According to this tiktok user, VP Kamala Harris' motorcade crashed yesterday morning. I've seen no news reports of this strange incident. ? pic.twitter.com/Vd49UvryhT
— Moshe Schwartz (@YWNReporter) October 4, 2022
இந்த சம்பவம் முதலில் இயந்திர கோளாறு என தெரிவிக்கப்பட்ட நிலையில், இப்போது அங்கு நடந்தது என்ன என்பது குறித்து அமெரிக்க ரகசிய சேவை விவரங்களை வெளியிட்டுள்ளது.
சம்பவ இடத்தில் ஒரு TikTok பயனரால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
வாகன அணிவகுப்பு வெள்ளை மாளிகைக்கு வந்தபோது, அவருக்கு காயங்கள் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்த மருத்துவ ஊழியர்களால் பரிசோதிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில், எந்த ஒழுங்கு நடவடிக்கையும் இருக்காது என்று ரகசிய சேவையின் செய்தித் தொடர்பாளர் அந்தோனி குக்லீல்மி கூறியுள்ளார். மேலும், "இந்த விவரத்தில் நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்கள் அதிகாரிகள் இதை எப்படிக் கையாண்டார்கள் என்பது சரியாக இருந்தது" என்று அவர் கூறினார்.