பிரபல ஐரோப்பிய நாட்டிற்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்கா! ரஷ்யாவுக்கு மீண்டும் பகிரங்க எச்சரிக்கை
உக்ரைனை கைப்பற்றும் நோக்கி, ரஷ்யா தாக்குதல் நடத்தினால், கடுமையான பொருளாதார தடை விதிக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் அதன் எல்லையில் ரஷ்யா படைகளை நிறுத்தி வைத்துள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவது போன்று பல விஷயங்களை செய்து வருகிறது.
ஆனால் ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிகாரிகள் இடையே சுவிட்சர்லாந்தில் இன்று பேச்சு நடக்க உள்ளது. இந்நிலையில் இது குறித்து அமெரிக்கா, உக்ரைன் விவகாரத்தில் எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யா எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். நட்பு நாடுகளுடன் இணைந்து ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும்.
ரஷ்யாவுக்கான ஏற்றுமதிகள் நிறுத்தப்படும். ரஷ்யாவால் அச்சுறுத்தல் உள்ளதால் ஐரோப்பிய நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளது.