மெக்சிகோ எல்லையை சட்ட விரோதமாக கடக்கும் புலம்பெயர்ந்தோரை எச்சரிக்கும் அமெரிக்கா!
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையேயான தெற்கு எல்லையை சட்ட விரோதமாக கடக்கும் புலம்பெயர்ந்தோர்க்கு, கடுமையான தண்டனை வழங்கப்படும் என அமெரிக்கா அரசு எச்சரித்துள்ளது.
கோவிட்-19 கட்டுப்பாடு
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே தெற்கு எல்லையில், கடந்த 2019ஆம் ஆண்டில் கொரோனாவை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்பின் உத்தரவின் படி இரு நாடுகளுக்கான எல்லை முடக்கப்பட்டது.
@reuters
இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே யாரும் சட்ட விரோதமாக உள்ளே நுழைய கூடாதென, கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டன.
டைட்டில் 42 என அழைக்கப்படும் கோவிட் கட்டுப்பாட்டு கொள்கை தற்போது முடிவடைய உள்ள நிலையில், எல்லையில் யாரும் சட்ட விரோதமாக நுழைய கூடாதென வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
@reuters
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் சட்ட விரோதமாக உள்ளே நுழைந்தவர்களை, வெளியேற்றுமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அரசு அதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளார்.
பிடிபட்ட புலம்பெயர்ந்தோர்
இதனிடையே டைட்டில் 42 என்ற சட்டம் கடந்த வெள்ளிக்கிழமையோடு நிறைவடைந்த நிலையில், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
@reuters
இந்நிலையில் அமெரிக்க அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களில் மெக்சிகோ எல்லையில், குடியேறியவர்களின் எண்ணிக்கையில் 50% பேர் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களில் மெக்ஸிகோவிற்கு 2,400க்கும் மேற்பட்ட மக்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது, என எல்லை பாதுகாப்பு அதிகாரி Nuñez-Neto கூறியுள்ளார்.
@reuters
தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதற்காக மற்ற நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக எல்லையில் நுழைபவர்கள், கடுமையான மலைப் பாதையை கடந்து வருகிறார்கள்.
மேலும் தீவிர ராணுவ கட்டுப்பாடுகளால் சிலர் பலியாகிறார்கள்.
உயிர் பிழைப்பவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அதில் 50% புலம்பெயர்ந்தோர் தற்போது பிடிபட்டுள்ளனர் என எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.