ரஷ்யாவுக்கு உதவினால்... சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
உக்ரைன் போரில் சீனா ரஷ்யாவுக்கு ஆதரவளித்துவரும் நிலையில், அது உயிரைக் கொல்லும் பொருட்களை ரஷ்யாவுக்கு வழங்கினால் சீன நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஏற்கனவே சீனாவை எச்சரித்துள்ள அமெரிக்கா
அமெரிக்க மாகாணச் செயலரான Antony Blinken சமீபத்தில் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போது, உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஆதரவளித்தால் சந்திக்கவிருக்கும் பின்விளைவுகளைக் குறித்து ஏற்கனவே சீனாவை எச்சரித்துள்ளோம் என்றார்.
கிடைத்துள்ள தகவல்
இந்நிலையில், எங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், இதுவரை சீன நிறுவனங்கள் சில ரஷ்யாவுக்கு அளித்துவந்த ஆதரவை தாண்டி, தற்போது ரஷ்யாவுக்கு உயிரைக் கொல்லக்கூடிய பொருட்களை வழங்க சீனா திட்டமிட்டுவருவதாக தெரியவந்துள்ளது.
ஆகவே, எங்கள் தடைகளை மீறி ரஷ்யாவுக்கு உதவும் சீன நிறுவனங்கள் அல்லது தனி நபர்களைக் குறிவைக்கத் தயங்கமாட்டோம் என்று எச்சரித்துள்ளார் அமெரிக்க மாகாணச் செயலரான Antony Blinken.