நெருங்கிய அமெரிக்க போர்க்கப்பல்... எந்த நேரத்திலும் தாக்கத் தயாராக இருக்கும் ட்ரம்ப்
எந்த நேரத்திலும் ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிடலாம் என்ற தகவல் வெளியான சில மணி நேரங்களில் வெனிசுலாவை தாக்கும் தொலைவில் அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று நெருங்கியுள்ளது.
அமைதியற்றதாக்கும்
சர்வாதிகாரத்திற்கு எதிரான நடவடிக்கையாக ட்ரம்ப் பல வாரங்களாக கரீபியனில் அமெரிக்க போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வீரர்களை களமிறக்கி வருகிறார்.

இந்த நிலையில், வெனிசுலாவிலிருந்து வெறும் 124 மைல் தொலைவில் யுஎஸ்எஸ் இவோ ஜிமா என்ற ஒரு பெரிய இராணுவக் கப்பல் தற்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதை புதிய செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
அது ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை மிக மோசமாக அமைதியற்றதாக்கும் என்று நம்பப்படுகிறது. குறித்த கப்பலில் 1600 சிறப்புப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
சுமார் 12 மைல் எல்லைக்குள் மேலும் இரண்டு போர்க்கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. மேலும், உத்தரவு வழங்கப்பட்ட ஐந்து மணி நேரத்திற்குள் வெனிசுலா கடற்கரையை எட்டும் வகையில் இவோ ஜிமா கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.

கடற்படையில் 14 சதவீதம்
வெனிசுலா சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மதுரோ நிர்வாகம், இது ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்றும் விமர்சித்துள்ளது. இதனிடையே, மிக விரைவில் USS Gerald R Ford போர்க்கப்பலும் வெனிசுலா பகுதிக்கு அனுப்பப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இது தீவிர நோக்கத்தின் ஒருபகுதியாகும் என்றே குறிப்பிடுகின்றனர். ஃபோர்டு போர்க்கப்பலானது 90 போர் விமானங்களைத் தாங்கும் என்பதுடன், 5000 வீரர்களும் பயணிக்க முடியும்.

ஃபோர்டு கப்பலும் வந்து சேரும் என்றால், அமெரிக்காவின் மொத்த கடற்படையில் 14 சதவீதம் கரீபியனில் நிறுத்தப்படுகிறது என்றே நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனாலையே, எந்த நேரத்திலும் தாக்குதல் உத்தரவை ஜனாதிபதி ட்ரம்ப் வழங்கலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |