ஒளியின் வேகத்தில் ஏவுகணைகளைத் தாக்கி உருக்கும் புதிய ஆயுதம்... அமெரிக்க இராணுவம் அசத்தல்
எதிரி விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை உருக்கி அழிக்கக்கூடிய புதிய ஒளி வேக லேசர் ஆயுதத்தை அமெரிக்க இராணுவம் உருவாக்கியுள்ளது.
HELIOS அமைப்பு
இராணுவ வட்டாரத்தில் இருந்து வெளியான தகவலின் அடிப்படையில், புதிய அந்த ஆயுதத்திற்கு HELIOS அமைப்பு என பெயரிடப்பட்டுள்ளதாகவும், வெளியான புகைப்படம் ஒன்றில் போர் கப்பல் ஒன்றில் இருந்து அந்த ஆயுதம் இயக்கப்படுவதும் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் CCM வெளியிட்டுள்ள ஆவணங்களில் புதிய அந்த ஆயுதம் சோதனை முன்னெடுக்கப்பட்டதின் விரிவான விளக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
HELIOS அமைப்பானது அமெரிக்க கடற்படைக்காக லாக்ஹீட் மார்ட்டின் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது பல வகையில் பயன்படுத்த முடியும், அழிவுகரமான லேசர் ஆயுதமாகவும், உளவுத்துறை மற்றும் உளவு சென்சார்களை சீர்குலைக்கும் ஆப்டிகல் டாஸ்லராகவும் செயல்படுத்தலாம்.
பிரித்தானியாவும்
இந்த லேசர் ஆயுதமானது 60 kW உயர் ஆற்றல் கொண்ட லேசரைப் பயன்படுத்துகிறது, இது ஒளியின் வேகத்தில் இலக்குகளை தாக்கும். இந்த ஆயுதத்தால் இலக்குகளை உருக வைக்கவோ அல்லது அதிக வெப்பப்படுத்துவதன் மூலமோ அவற்றை முடக்க அல்லது அழிக்க முடியும்.
இந்த HELIOS அமைப்பானது ட்ரோன்கள், விரைவுத் தாக்குதல் தொடுக்கும் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது.
கடந்த ஆண்டு பிரித்தானியாவும் இது போன்ற ஒரு லேசர் ஆயுத அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |