மனைவி கொடுத்த தேநீரில் வித்தியாச சுவை..ரகசிய கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..உயிர்பிழைத்த கணவன்
அமெரிக்காவில் தோல் மருத்துவரான மனைவி, தனது கணவருக்கு தேநீரில் விஷம் கலந்து கொடுத்ததாக ஆதாரத்துடன் குற்றம்சாட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது.
தோல் மருத்துவர் மனைவி
கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த தோல் மருத்துவர் யூ எமிலி. இவரது கணவர் ஜேக் சென் கதிரியக்க நிபுணராக இருந்து வருகிறார்.
கடந்த ஆண்டு தன் மனைவி கொடுத்த தேநீரில் வித்தியாசமான சுவையை ஜேக் உணர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து மனைவியை கண்காணிக்க 2.7 மில்லியன் டொலர் செலவு செய்து ரகசிய கமெராவை வைத்துள்ளார்.
நச்சு வடிகால் திரவம்
அப்போது தன் மனைவி மர்மமான திரவத்தை தேநீரில் ஊற்றுவதை கமெராவில் பதிவான காட்சியில் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன் பின்னர் அந்த மர்ம திரவம் நச்சு வடிகால் சுத்தம் செய்யும் பொருள் என்பது தெரிய வந்தது.
அதிர்ஷ்டவசமாக ஜேக் சென் உயிர்பிழைத்தாலும், அவரது உடலில் புண்கள் ஏற்பட்டுள்ளன.
தடை உத்தரவு பிறப்பித்த கணவன்
இந்த சம்பவம் மூலம் கைது செய்யப்பட்ட எமிலி, 30 ஆயிரம் டொலர் பத்திரம் மூலம் விடுவிக்கப்பட்டார். மேலும் சென் அவருக்கு எதிராக ஒரு தடை உத்தரவுக்கு விண்ணப்பித்துள்ளார்.
எமிலி ஏன் இவ்வாறு செய்தார் என்பதற்கான காரணம் வெளிவரவில்லை. இதற்கிடையில் தங்கள் மகன், மகளை எமிலி துன்புறுத்தி வந்ததாக ஜேக் சென் குற்றம்சாட்டியுள்ளார்.