நெதன்யாகுவுக்கு அடுத்த நெருக்கடி... இஸ்ரேலுக்கான இராணுவ உதவி தொடர்பில் ட்ரம்ப் அதிரடி முடிவு
US will end military aid to Israel: அமெரிக்கா இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்திக்கொள்ளும்.
இந்த ஆண்டின் இறுதியில் இஸ்ரேலுக்கான இராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்திவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அவர்களுக்கு தேவையில்லை
இது, இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவு மற்றும் காஸா போர் குறித்து ஐயப்பாடு கொண்ட மக்களைக் குறிவைத்து விடுக்கப்பட்டதாகவே கூறப்படுகிறது.

ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துடனான தொலைபேசி நேர்காணலில், இஸ்ரேலுக்கு வழங்கப்படும் சுமார் 4 பில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ உதவியைக் குறைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்; மேலும், அவர்களுக்கு அது தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இந்த உதவியை நிறுத்தப்போவதாகத் தெரிவித்த ட்ரம்ப், அதற்குப் பதிலாக இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யப்போவதாகக் குறிப்பிட்டார்.
மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அப்துல் எல்-சையத் உள்ளிட்ட வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்கும் வேட்பாளர்கள், அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் இந்த உதவி இடம்பெற்றிருப்பதை விமர்சித்து வந்தனர்; இதைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேர்காணலின் போது, இராணுவ உதவியை திடீரென நிறுத்தும் யோசனையை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்வைத்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, இது தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் எனவும், இது ஒரு பெரிய தொகை எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த பத்தாண்டுகளில் இஸ்ரேலுக்கான அமெரிக்க இராணுவ உதவியை படிப்படியாகக் குறைக்கலாம் என்று நெதன்யாகு முன்னதாகப் பரிந்துரைத்திருந்தார், ஆனால் செவ்வாயன்று ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு அந்த காலக்கெடுவை கணிசமாக விரைவுபடுத்தும்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பைக் கண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்ததாகவே கூறப்படுகிறது; எதிர்க்கட்சியின் முக்கியத் தலைவர்கள், நெதன்யாகு அமெரிக்கா-இஸ்ரேல் உறவுக்கு ஏற்படுத்திய பாதிப்பை இது காட்டுகிறது என்று விமர்சித்துள்ளனர்.

கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் நெதன்யாகுவின் கட்சி நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்த நிலையில், அவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க முயற்சிக்கும் மிக முக்கியமான தருணத்தில் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலிய குடிமக்களுடன் சேர்ந்து பாதுகாப்பு அமைப்பும், அதி முக்கியத்துவம் வாய்ந்த உறவு கட்டமைப்பில் ஏற்படும் மாற்றத்தைப் பற்றி ஊடகங்கள் மூலம் அறிந்துகொள்வது, பெஞ்சமின் நெதன்யாகுவின் நடத்தை இஸ்ரேலுக்கு எந்த அளவிற்கு உண்மையான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று காடி ஐசன்கோட் விமர்சித்துள்ளார்.
இனி நெதன்யாகுவை நம்பி
இஸ்ரேலில் மிதவாத-வலதுசாரி அரசியல்வாதியும், நெதன்யாகுவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்க முயல்பவருமான காடி ஐசன்கோட் தற்போது புதிய கூட்டணி ஆட்சிக்கு முயற்சிகள் முன்னெடுத்து வருகிறார்.
இஸ்ரேல் மக்கள் இனி நெதன்யாகுவை நம்பி இருக்கத் தேவையில்லை, அவருக்குப் பதிலாக இன்னொருவர் பிரதமர் பொறுப்புக்கு வர வேண்டும் என்றார்.

2025-ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட சுமார் 3.8 பில்லியன் டொலர் நிதியில் பெரும்பகுதி, அந்நாடு அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்களை வாங்குவதற்கு ஏதுவாக, வெளிநாட்டு ராணுவ நிதியுதவி மானியங்களாக வழங்கப்பட்டன.
மேலும் 500 மில்லியன் டொலர் தொகை, கூட்டு ஏவுகணைத் தற்காப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டது. செப்டம்பரில் வெளியிடப்பட்ட குவினிபியாக் பல்கலைக்கழகத்தின் கருத்துக் கணிப்பு, 48 சதவீத அமெரிக்கர்கள் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அதிக ஆதரவளிப்பதாக நம்புவதாகக் காட்டியுள்ளது.