அணு ஆயுதம் கொண்ட ஈரான் மிகவும் ஆபத்தானது: ஜோ பைடன் எச்சரிக்கை
ஈரான் அணுஆயுதங்களை வாங்குவதற்கு அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது.
அணுஆயுதங்களை கொண்ட ஈரான் என்பது மிகவும் மோசமான விஷயம்.
ஈரான் அணு ஆயுதங்களை வாங்குவதற்கு அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று ஜனாதிபதி ஜோ பிடன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பல சுற்றுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த அணுசக்தி ஒப்பந்தம் வரவிருக்கும் வாரங்களில் தீர்க்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தநிலையில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய ஒப்பந்தம் ஆரம்ப ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்ற கவலையை இஸ்ரேலிய அதிகாரிகள் எழுப்பியுள்ளனர்.
Shutterstock
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பிரதமர் யாைர் லபிட் (Yair Lapid) உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) பிராந்திய பாதுகாப்பு அபாயங்கள், அவற்றிலும் குறிப்பாக ஈரானால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான நாட்டின் அர்ப்பணிப்பு குறித்து உறுதியளித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் கொல்லப்பட்ட பிரித்தானிய மருத்துவர்: உடலை தாய்நாட்டிற்கு கொண்டுவருவதில் சிரமம்
அத்துடன் இப்போது இருக்கும் ஈரானை விட மோசமான ஒரே விஷயம் அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரான் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கையும் தெரிவித்துள்ளார்.