G-20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா கலந்து கொள்ளாது: தென்னாப்பிரிக்காவை எதிர்த்து டிரம்ப் சபதம்
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா கலந்து கொள்ளாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் சபதம்
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தென்னாப்பிரிக்காவில் ஆஃப்ரிகானர்கள்(Afrikaners) தொடர்ந்து கொல்லப்படுவதை கண்டித்து, அந்நாட்டில் நடைபெற இருக்கும் ஜி 20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா கலந்து கொள்ளாது என எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை டிரம்ப் அவரது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட கடுமையான அறிக்கையில், தென்னாப்பிரிக்காவில் ஆஃப்ரிகானர்கள் (டச்சு பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் குடியேறிகளின் வழித்தோன்றல்கள்) தொடர்ந்து கொல்லப்படுவதும், அவர்களுடைய சொத்துக்களை சட்டவிரோதமாக பறிமுதல் செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இந்த மனித உரிமை மீறல் தொடரும் வரை, தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் எந்தவொரு அமெரிக்க அதிகாரிகளும் கலந்து கொள்ள மாட்டார் என டிரம்ப் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

அத்துடன், தென்னாப்பிரிக்காவில் ஜி 20 உச்சி மாநாடு நடத்தப்படுவது தனக்கு கிடைத்த மிகப்பெரிய அவமானகரமான முடிவு என்றும் டிரம்ப் கண்டித்துள்ளார்.
அந்த அறிக்கையில், புளோரிடாவின் மியாமியில் அடுத்த ஜி 20 உச்சி மாநாட்டை நடத்த ஆவலுடன் இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |