அமெரிக்காவைப் புரட்டி எடுக்கும் வரலாறு காணாத பனிப்புயல்! மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் லட்சக்கணக்கில் மக்கள்
அமெரிக்காவின் மேற்கு மற்றும் மத்திய வடக்கு பகுதியில் அமெரிக்கத் தேசிய வானிலை மையம் அதிதீவிர பனிப்பொழிவுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
பனிப்புயல்
தற்போது அமெரிக்கப் பனிப்புயல் இடம்பெற்றுள்ளது.
இந்த பனிப்புயலால் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்படும் என்று அமெரிக்க வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள டகோடாஸ், மினசோட்டா மற்றும் விஸ்கான்சின் ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
Due to inclement weather, the park is closed. Rangers are working on reopening as soon as possible! #ParkClosure pic.twitter.com/5DqywpeLdK
— Joshua Tree NPS (@JoshuaTreeNPS) March 1, 2023
மேலும் கலிபோர்னியா மாகாணத்தில் அதிவேகத்தில் காற்று வீசி வருகிறது. மின்சாரம் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் மேற்கு மற்றும் மத்திய வடக்கு பகுதியில் 2 அடி வரை பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த பகுதியில் சுமார் 55 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர்.
Photograph: Katrina Kochneva/Zuma/Rex/Shutterstock