வாஷிங்டன் மலையேற்ற விபத்து: 3 பேர் பரிதாபமாக பலி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்!
வாஷிங்டனில் நடந்த மலையேற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
மலையேற்ற விபத்து
வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள கரடுமுரடான நிர்வாண குளிர்கால முகடு(Early Winters Spire) சிகரங்களில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு துயர சம்பவத்தில், மலையேற்றத்தின்போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பல நூறு அடி உயரத்தில் இருந்து கூரான பாறைகளில் விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் விஷ்ணு இரிகிரெட்டி (48), டிம் நுயென் (63), மற்றும் ஒலெக்சாண்டர் மார்டினென்கோ (36) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்த மலையேறிகள் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து ஒகானோகன் கவுண்டி ஷெரிப் அலுவலக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மலையேற்ற குழுவினர் 7,800 அடி உயரமுள்ள சிகரங்களில் உள்ள செங்குத்தான பள்ளத்தாக்கில் இறங்கிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், செங்குத்தான மலைப்பாதையில் இறங்குவதற்கு பயன்படுத்தப்படும் முக்கியமான உலோக நங்கூரம் "பழமையான" பிட்டன் (piton) பாறையிலிருந்து திடீரென விலகியதே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த பிட்டன் சரியாக பற்று கொள்ளாததால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக அது பாறையிலிருந்து கழன்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்
இந்த சோகமான சம்பவத்தில், சியாட்டிலைச் சேர்ந்த 38 வயதான அன்டன் ட்ஸெலிக் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அவர் சுமார் 200 அடி உயரத்தில் இருந்து கூரான பாறைகளில் விழுந்தும், பின்னர் மேலும் 200 அடி தூரம் உருண்டும் கயிறுகள் மற்றும் மலையேற்ற உபகரணங்களின் குவியலில் சிக்கி உயிர் பிழைத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |