உயிரைக் காப்பாற்றிய செல்ஃபி! அமெரிக்க பெண்ணின் நம்ப முடியாத மருத்துவ கதை
அமெரிக்காவின் மெகன் ட்ரௌட்வைன் என்பவருக்கு நியூயார்க் நகர பயணம் அவரது வாழ்க்கையையே மாற்றி அமைத்த ஒரு அனுபவமாக மாறியுள்ளது.
வாழ்க்கையை மாற்றிய செல்பி புகைப்படம்
அமெரிக்காவை சேர்ந்த மேகன் ட்ரூட்வைன், 35(Megan Troutwine) என்ற பெண் நியூயார்க் நகரில் உள்ள தன்னுடைய உறவினரை(cousin) பார்க்க சென்றுள்ளார்.
அப்போது, தனது மருமகளுடன் மிட் டவுன் மன்ஹாட்டனில் சுற்றித் திரிந்த போது, ராக்பெல்லர் சென்டர் நீரூற்றுகளுக்கு அருகில் ட்ரவுட்வைன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.
பின்னர் அந்த படத்தை பார்த்தபோது, கவலைப்பட வைக்கும் ஒன்றைக் கவனித்தார், அதில் அவரது கண் இமை தெளிவாக தொய்வடைந்திருந்தது. மேலும் தனது தோற்றத்தில் ஏற்பட்ட இந்த நுட்பமான மாற்றம் மேகன் ட்ரூட்வைன் மனதில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அத்துடன் அவரது சமீபத்திய நினைவக பிரச்சனைகள் மற்றும் உடற்பயிற்சி செய்வதில் சிரமம் ஆகியவற்றுடன் இணைந்து மேகன் ட்ரூட்வைனுக்கு ஆபத்தின் உச்சத்தை உணர்த்தியது.
இதையடுத்து அவர் ப்ளோரிடாவுக்கு திரும்பியதும் மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார்.
தனது உள்ளுணர்வைத் தொடர்ந்து, செல்பியில் கண் இமை தொங்குவதைப் பற்றி தனது நரம்பியல் நிபுணரிடம் ட்ரவுட்வைன் ஆலோசித்தார்.
இந்த எளிய செயல் ஒரு விரைவான MRI ஸ்கேனுக்கு வழிவகுத்தது, இது துரதிர்ஷ்டவசமாக பிரச்சனையின் மூல காரணத்தை வெளிப்படுத்தியது. அதில் அவருக்கு “meningioma" என்ற ஒரு வகை மூளை கட்டி(brain tumour) இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
உடனடி சிகிச்சை
மெகனின் மூளையில் இருந்த கட்டி ஆக்ரோஷமானதாக இருந்தது மற்றும் உடனடி சிகிச்சை தேவைப்பட்டது.
செல்ஃபி மற்றும் அவரது கவனம் செலுத்துதல் ஆகியவற்றின் காரணமாக, கட்டி ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டது, இது சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கு வழிவகுத்தது.
US woman discovers brain tumor in selfie,
selfie reveals brain tumor,
how a selfie saved a life,
early detection of brain tumor,
subtle signs of brain tumor,