காரில் 2 குழந்தைகளின் சடலங்களுடன் பல மாதம் பயணம் செய்த பெண் கைது! வெளியான அதிர்ச்சியூட்டும் பின்னணி!
அமெரிக்காவில் இரண்டு குழந்தைகளின் சடலங்களுடன் காரில் பல மாத காலம் பயணம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் Baltimore நகரை சேர்ந்த 33 வயது நிக்கோல் ஜான்சன் (Nicole Johnson) மீது இந்த 'குழந்தை துன்புறுத்தல்' உட்பட பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை, நிக்கோல் தனது காரை வேகமாக ஓட்டியதற்காகக் காவல்துறை அதிகாரிகளால் நிறுத்தப்பட்டபோது, அந்த காருக்குள் 7 வயதுச் சிறுமி மற்றும் 5 வயதுச் சிறுவன் ஆகியோரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த இரு குழந்தைகளும் ஜான்சனின் சகோதரியின் பிள்ளைகள் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் 2019-ஆம் ஆண்டு, சகோதரியால் தன் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதாக ஜான்சன் தெரிவித்தார்.
அந்த குழந்தைகள் சென்ற ஆண்டு மே மாதமே இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
விசாரணையின்போது, அந்தச் சிறுமியைப் பல முறை அடித்ததை ஜான்சன் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்தச் சிறுவனின் மரணம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
