அமெரிக்க பெண்ணை பிரித்தானியாவுக்கு நாடு கடத்திய அதிகாரிகள்: சுமத்தப்பட்டுள்ள கொலை சதி குற்றச்சாட்டு
கொலை சதி வழக்கில் அமெரிக்க பெண் பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
அமெரிக்க பெண் கைது
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தை சேர்ந்த 45 வயதான அமெரிக்க குடிமகள் ஏமி பெட்ரோ(Aimee Betro,), படுகொலை சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்..
ஆர்மீனியாவில் கைது செய்யப்பட்ட அவரை, தேசிய குற்ற ஆணையத்தின் கூட்டு சர்வதேச குற்ற மையத்தின் சிறப்பு அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் Gatwick விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிஸார், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பர்மிங்காமில் உள்ள ஒரு ஆடை கடை உரிமையாளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கொல்லும் சதியில் பெட்ரோ ஈடுபட்டிருந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.
சவுத் யார்ட்லியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், கடை உரிமையாளர் துப்பாக்கியால் மிரட்டப்பட்டுள்ளார், ஆனால் துப்பாக்கி சரியாக செயல்படாததால் அவர் தப்பி ஓடியுள்ளார்.
ஏமி பெட்ரோ எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகள்
படுகொலை சதி, வன்முறை அச்சுறுத்தலுக்காக துப்பாக்கி வைத்திருந்தல் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு வெடி மருந்துகளை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை பெட்ரோ எதிர்கொள்கிறார்.
Derbyshire காவல்துறையினரின் விசாரணையின் அடிப்படையில் இறுதி குற்றச்சாட்டு வழங்கப்பட்டுள்ளது.
We have authorised @WMPolice to charge American national Aimee Betro, 45, from Wisconsin following an attempted shooting in Birmingham.
— Crown Prosecution Service (@CPSUK) January 16, 2025
She was extradited from Armenia today. She will appear at Birmingham Magistrates’ Court tomorrow.
Read more here: https://t.co/VrYP9oHAUc pic.twitter.com/QkLDvuUdI6
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வெள்ளிக்கிழமை பர்மிங்காம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |