குழந்தை அழுவதை நிறுத்த பெண் செய்த விபரீதமான செயல்: சிறையில் அடைத்த பொலிஸார்
அமெரிக்காவில் குழந்தை அழுவதை நிறுத்துவதற்காக பாட்டில் ஆல்கஹால் நிரப்பி கொடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைக்கு மதுபானம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான் பெர்னார்டினோ கவுண்டியை சேர்ந்த ஹொனெஸ்டி டி லா டோரே(Honesti De La Torre, 37) என்ற பெண் ஒருவர் குழந்தையை அழுவதை நிறுத்துவதற்காக பாட்டிலில் மதுபானம் நிரப்பி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சான் பெர்னார்டினோ கவுண்டி காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்ள தகவலில், சம்பந்தப்பட்ட பெண் ரியால்டோ(Rialto) வழியாக காரில் சென்று கொண்டிருந்த போது குழந்தை விடாமல் அழுவதை நிறுத்துவதற்காக பாட்டிலில் ஆல்கஹால் நிரப்பி கொடுத்துள்ளார்.
Photo: iStockPhoto
இதனையடுத்து குழந்தை உடல்நல குறைவு ஏற்பட்டு இருப்பதை அறிந்து உடனடியாக மருத்துவமனையில் ஹொனெஸ்டி டி லா டோரே அனுமதித்ததை தொடர்ந்து, குழந்தையின் உடலில் நச்சுத்தன்மை ஏறி இருப்பதை மருத்துவர் கண்டுப்பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்
இந்நிலையில் குழந்தைக்கு மதுபானம் கொடுத்த குற்றத்திற்காக ஹொனெஸ்டி டி லா டோரே சனிக்கிழமை ரியால்டோ-வில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரது வழக்கு செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தற்போது குழந்தையின் உடல்நிலை குறித்த எத்தகைய தகவலும் தெரிய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |