ஈராக் பிரபல அமெரிக்க பெண் பத்திரிகையாளர் கடத்தல்: தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர்
ஈராக் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பத்திரிகையாளர் கடத்தல்
செவ்வாய்க்கிழமை மாலை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பிரபலமான அமெரிக்க பெண் பத்திரிகையாளரான ஷெல்லி கிட்டிலெசன் கடத்தப்பட்டுள்ளார்.

பல்வேறு விருதுகளை வென்ற அமெரிக்க பெண் பத்திரிகையாளரான ஷெல்லி கிட்டிலெசனை மீட்பதற்காக நடவடிக்கையில் ஈராக் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக பத்திரிகையாளர் ஷெல்லி கிட்டிலெசன் ஈராக்கிற்கு செல்ல வேண்டாம் என்றும், ஈராக் செல்வது அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அமெரிக்க அரசு ஏற்கனவே எச்சரித்து இருந்தது.
ஷெல்லி கிட்டிலெசன் கடத்தப்பட்ட சம்பவத்தை ஈரான் உள்துறை அமைச்சகம் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதில், கடத்தப்பட்டவர் அமெரிக்க பெண் என்று ஈராக் பாதுகாப்பு படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
— Esam79 (@Esam793) March 31, 2026
ஒருவர் கைது
கடத்தல்காரர்களை விரட்டிச் சென்ற பாதுகாப்பு படையினர், கடத்தல்காரர்கள் பயன்படுத்திய இரண்டு வாகனங்களில் ஒன்றை விரட்டி பிடித்தனர்.
பின்னர் அந்த வாகனத்தில் இருந்த ஒருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இருப்பினும், ஷெல்லி கிட்டிலெசன் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனம் பாக்தாத்தின் தெற்கு பகுதியை நோக்கி தப்பிச் சென்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |