கணவனை அடக்கம் செய்த சில மணிநேரங்களில் மனைவிக்கு நேர்ந்த சோகம்!
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை அடக்கம் செய்த ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார் விபத்து
விஸ்கான்சினைச் சேர்ந்த சாரா நோவாக் (Sarah Nowak) ஏப்ரல் 1-ஆம் திகதி இரவு 8:30 மணியளவில் பால்மைராவில் கால்கின்ஸ் சாலைக்கு அருகில் மாநில நெடுஞ்சாலை 106-ல் கார் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். காரில் இருந்த மற்றோரு நபரும் விபத்தில் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தார்.
சாரா நோவாக் குடும்பத்திற்கு இது மிகப்பெரும் சோகமாக அமைந்தது. ஏனெனில், சில மணிநேரங்களுக்கு முன்பு தான் அவர் தனது காதல் கணவனுக்கு இறுதிச்சடங்குகளை நிறைவேற்றி அடக்கம் செய்துள்ளார்.
Facebook/Sarah Nowak
கணவர் மரணம்
விசாரணையில், அவரது கணவர் லூயிஸ் நோவாக் (Louis Nowak) புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு மார்ச் 18 அன்று இறந்தார் என்பது தெரியவந்தது.
இந்த ஜோடிக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகிறது மற்றும் இருவருக்கு மொத்தமாக ஆறு குழந்தைகள் உள்ளனர் (முந்தைய உறவுகள் மூலம்).
Facebook/Sarah Nowak
இந்த சோக சம்பவம் குறித்து பேசிய சாராவின் தாயார், பாட்ரிசியா கார்ட்ரைட், "அவர் இல்லாமல் அவளால் இருக்க முடியாது என்று நான் நினைக்கவில்லை. அதனால், அவள் அவர் இருக்கும் இடத்துக்கே சென்றுவிட்டாள்" என்று கூறினார்.
அவரது தந்தை, ராண்டல் கார்ட்ரைட், "இது மிகவும் கடினமாக உள்ளது, ஏனென்றால் இறுதிச்சடங்கு முடித்துவிட்டு ஐந்தரை மணி நேரம் கழித்து, உங்கள் மகள் விபத்தில் சிக்கியதாக எங்களுக்கு அழைப்பு வருகிறது" என்று கூறினார்.
Facebook/Sarah Nowak