முன்னாள் கணவரை பலி வாங்குவதற்காக தனது 2 மகள்களைக் கொன்ற தாய்!
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது முன்னாள் கணவரை பழி வாங்குவதற்காக அவர்களது மகள்களை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகள்களைக் கொன்ற தாய்
அமெரிக்காவை சேர்ந்த வெரோனிகா யங்ப்ளட் (37) என்ற பெண் தனது முன்னாள் கணவரை பலி வாங்குவதற்காக தனது மகள்களை கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.
வெரோனிகா தனது மகள்களான சரோன்(15), யங்ப்ளட்(5) ஆகியோரை கொலை செய்ததற்காக மனநலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் குற்றமற்றவர் என்று கடந்த ஆகஸ்ட் 15ல் ஒப்புக்கொண்டுள்ளார்.
@Fairfax County Circuit Court
ஆனால் அவர் மீது இரண்டு முதல் நிலை கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் வேண்டுகோளை நீதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.
மேலும் வெரோனிகா இரண்டு முறை துப்பாக்கிச் சூடு செய்ததற்காகவும் அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
”இந்த வழக்கு வெறும் மனநோய்க்கு அப்பாற்பட்டது. இது மனச்சோர்வுக்கு அப்பாற்பட்டது. இது PTSDக்கு அப்பாற்பட்டது. இது தற்கொலைக்கு அப்பாற்பட்டது" என்று வழக்கறிஞர் நீதி மன்றத்தில் கூறியுள்ளார்.
இரண்டு வார விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றம் தீர்ப்பு
யங்ப்ளட்டினின் சகோதரி, முன்னாள் கணவர் மற்றும் முன்னாள் காதலர் ஆகியோரும் சாட்சியமளித்ததாக தெரிவித்துள்ளது. யங்ப்ளட் ஒரு பாலியல் தொழிலாளியாக இருந்ததாக நியூயார்க் போஸ்ட் கூறியுள்ளது.
அவர் தனது சொந்த குடும்பத்தினரால் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பாதுகாப்பு வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
@Family Handout
மெக்லீன், வர்ஜீனியா அபார்ட்மெண்டில் அவர்கள் பாதுகாப்பற்றவர்களாக இருப்பதற்காக அவர் தனது குழந்தைகளுக்கு தூக்கு மாத்திரைகளை கொடுத்துள்ளார். தனது மகள் புரூக்ளின் தலையில் அவர் சுட்டதில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இரண்டாவது மகளான ஷரோன் இரண்டு முறை சுடப்பட்டுள்ளார். உடனே ஷரோன் உயிருக்குப் போராடிய நிலையில் அவசர எண்ணான 911 ஐ அழைத்து, அவரது தாயார் அவளை சுட்டுக் கொன்றதாக கூறியுள்ளார்.
அங்கு வந்த பொலிஸார் ஷரோனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.