கொளுத்தும் வெயிலில் 5 வயது சிறுவனை காரில் பூட்டி விட்டுச் சென்ற தாய்: பின்னர் நேர்ந்த சோகம்
அமெரிக்காவில் வளர்ப்பு தாயால் காரில் விட்டுச் செல்லப்பட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
அமெரிக்காவின் Omaha, Nebraska-வில் 5 வயது சிறுவன் டியோனிசியோ பெரேஸ்(Dionicio Perez), தனது வளர்ப்புத் தாயான ஜுவானிடா பினோனால் சுட்டெரிக்கும் காரில் ஏழு மணி நேரம் விட்டுச் செல்லப்பட்ட பிறகு துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.
சிறுவன் உயிரிழந்த போது வெப்பநிலை 89 டிகிரி பாரன்ஹீட் (31 டிகிரி செல்சியஸ்) ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு டியோனிசியோவின் உடல் வெப்பநிலை 105 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
இதுபோன்ற சூடான கார் இறப்பு சம்பவம் இந்த ஆண்டு அமெரிக்காவில் 10வது ஆகும்.
திருட்டு சம்பவத்தில் கைதான தாய்
வளர்ப்பு தாய் பினோன்(Pinon), தனது வேலைத்தளமான அழகு நிலையத்தின் வெளியே நிறுத்தப்பட்ட SUV காரில் டியோனிசியோவை விட்டுவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அவரது இந்த செயலுக்கான காரணம் இன்னும் தெளிவாக இல்லை.
கவனக்குறைவால் குழந்தை இறப்புக்கு வழிவகுத்த குற்றச்சாட்டை பினோன் தற்போது எதிர்கொள்கிறார், இது 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் $2 மில்லியன் பிணையத் தொகைக்கு வழிவகுக்கும்.
வளர்ப்பு தாயான 40 வயது பினோன், 2016ம் ஆண்டு திருட்டுக் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |