வெள்ளி பற்களை விழுங்கிய இளைஞர்: உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை
வெள்ளி பற்களை விழுங்கிய இளைஞர் ஒருவரை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளனர்.
பற்களை விழுங்கிய இளைஞர்
அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன் பற்கள் மீது நான்கு புள்ளிகள் கொண்ட வெள்ளி பற்கள் வரிசை அமைப்பை அணிந்து இருந்தார்.
இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் வலிப்பு ஏற்படவே, எதிர்பாராத விதமாக இளைஞர் அந்த வெள்ளி பற்கள் வரிசையை முழுங்கியுள்ளார்.
jam Press/Cureus
அத்துடன் விழுங்கபட்ட வெள்ளி பற்கள் வரிசை இளைஞரின் நுரையீரல் காற்று பாதையில் சிக்கியுள்ளது.
உயிரை காப்பாற்றிய மருத்துவர்
இதையடுத்து மருத்துவமனைக்கு விரைவாக சென்ற இளைஞரை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், ப்ரோன்கோஸ்கோபி முறையில், சிறிய கேமரா உதவியுடன் நுரையீரலில் சிக்கிய வெள்ளி பற்கள் வரிசையை மருத்துவர்கள் வெளியேடுத்தனர்.
அத்துடன் இந்த அறுவை சிகிச்சையின் போது நுரையீரலில் ஏற்பட்ட இரத்த கசிக்கு மருத்துவர்கள் சலைன் முறை சிகிச்சை அளித்து இளைஞரை முழுவதுமாக காப்பாற்றினர்.
jam Press/Cureus