நடுவானில் மூன்றே நிமிடத்தில் 15,000 அடி கீழ் இறங்கிய விமானம்: பீதியில் உறைந்த பயணிகள்
நடுவானில் பறந்து கொண்டு இருந்த அமெரிக்க விமானம் ஒன்று மூன்றே நிமிடங்களில் 15,000 அடி கீழ் இறங்கிய சம்பவம் பயணிகளை பீதியடைய வைத்துள்ளது.
15,000 அடி கீழ் இறங்கிய விமானம்
கடந்த 10ம் திகதி அமெரிக்காவில் பீட்மாண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் அமெரிக்கன் ஈகில் விமானம் 5916, வட கரோலினாவின் சார்லோட் பகுதியில் இருந்து புளோரிடாவின் கெய்னெஸ்வில்லி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென விமானம் வெறும் மூன்றே நிமிடங்களில் கிட்டத்தட்ட 15,000 அடி கீழ் இறங்கி உள்ளது. இதில் விமானத்தில் பயணம் செய்து கொண்டு இருந்த பயணிகள் பெரும் பீதியில் உறைந்தனர்.
American Eagle flight 5916
— RVIN (@Vinodrviv) August 13, 2023
Due to a probable pressurisation issue
an American Airlines flight heading for Florida drops to 15,000 feet in three minutes
However, the flight subsequently landed safely at Gainesville Regional Airport.
#america #airlines pic.twitter.com/G180sO1HCM
ஆனால் விரைவாக செயல்பட்ட அமெரிக்கன் ஈகிள் விமானம் 5916-ன் விமானி விமானத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். அத்துடன் விமானத்தை திட்டமிட்டப்படி கெய்னெஸ்வில்லியில் பத்திரமாக தரையிறக்கினார்.
இது தொடர்பாக விமான பயணி ஒருவர் தெரிவித்துள்ள கருத்தில், இது மிகவும் திகிலூட்டுவதாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
விமான நிறுவனம் விளக்கம்
இந்நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது அழுத்தம் குறைந்ததை விமான குழு உணர்ந்துள்ளது.
AP
எனவே விமானத்தை பாதுகாப்பான உயரத்திற்கு இறக்க வேண்டியது இருந்தது, இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம் என பீட்மாண்ட் ஏர்லைன்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |