அமெரிக்காவின் தாக்குதலில் பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு
ஏமனில் அமெரிக்க நடத்திய வான்வழி தாக்குதலில் 53 பேர் பலியாகியுள்ளனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஏமன் நாட்டில் அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின்படி தொடங்கிய இந்த தாக்குதலில் 24 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தலைநகர் சனா மற்றும் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியான சாடா உள்ளிட்ட மாகாணங்களை குறி வைத்தும் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து ஹவுதி அமைப்பால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், "அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உட்பட இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |