கனடா, அமெரிக்காவில் குழந்தைகள் மீது தடுப்பூசி பரிசோதனை தொடக்கம்
அமெரிக்கா மற்றும் கனடாவில் குழந்தைகள் மீதான கொரோனா தடுப்பூசி பரிசோதனையை மாடர்னா தடுப்பூசி நிறுவனம் தொடங்கியுள்ளது.
6 மாதங்கள் முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க மருந்து உற்பத்தியாளர் மாடர்னா தெரிவித்துள்ளது.
கனடா மற்றும் அமெரிக்காவில் சுமார் 6,750 குழ்நதைகள் இந்த பரிசோதனையில் பங்கேற்கின்றனர்.
பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குறைவான அளவிலேயே குழந்தைகள் கொரோனாவால் நோய்வாய்ப்பட்டிருகின்றனர், ஆனால் அவர்களுக்கு மேலும் நோய்த்தொற்று ஏற்படலாம் என்பதாலும், அவரகள் மூலமாக வைரஸ் பரவக்கூடும் என்பதாலும் இந்த சோதனை நடத்தப்படுவதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கு அழுத்தம் அதிகரித்த்துள்ள நிலையில், குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய தடுப்பூசியை விரைவில் கண்டறிவதில் அமெரிக்கா முனைப்பில் உள்ளது.
இதேபோல், அமெரிக்காவில் ஃபைசர் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒற்றை டோஸ் தடுப்பூசிகளை குழந்தைகள் மீதான பரிசோதனையை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.