உடல் பருமனை குறைக்க உதவும் மருந்துக்கு அமெரிக்க ஒப்புதல்: எலான் மஸ்க்கின் பழைய விடியோ வைரல்
உடல் பருமனை குறைக்க உதவும் மருந்திற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமெரிக்க அரசு ஒப்புதல்
உடல் எடையை குறைக்க உதவும் வெகோவி மருந்தை அமெரிக்காவில் விற்பனை செய்ய அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நோவோ நோர்டிஸ்கின் வெகோவி(WEGOVY), மற்றும் லில்லியன் ஆஃபொர் க்ளிப்ரான்(LILLIAN ORFORGLIPRON) மாத்திரைகள் பெரும்பாலும் உடை எடையை குறைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த மருந்துகள் பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை போன்று உடலில் செயல்பட்டு உடல் எடையை குறைக்க உதவுகிறது.
ஆஃபொர் க்ளிப்ரான் இன்னும் தொடர்ந்து மதிப்பாய்வில் உள்ள நிலையில், அமெரிக்க அரசு வெகோவியை பயன்படுத்த அனுமதி தந்துள்ளது.
நோவோ நோர்டிஸ்க், மற்றும் லில்லியன் மருந்துகள் அமெரிக்காவில் பெரும் வரவேற்பை பெற்ற பிறகு இந்த அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்கின் பழைய பேட்டி

இதற்கிடையில் பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், தான் வெகோவி மருந்தை மருத்துவ ஆலோசனையின் பெயரில் எடுத்துக் கொண்டதாக தெரிவித்த பழைய வீடியோ வைரலாகி வருகிறது.
வெகோவி மருந்தை உடல் எடையை குறைக்கவும், ஃபிட்னெஸ் பலன்களை அடையவும் தான் எடுத்துக் கொண்டதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |