வங்கதேசத்தை வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்த அமெரிக்கா
ஹௌஸ்டனில் நடந்த முதல் டி20 போட்டியில், அமெரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி சாதனை படைத்தது.
டௌஹித் அரைசதம்
அமெரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று தொடங்கியது.
ஹௌஸ்டனில் நடந்த முதல் போட்டியில் வங்கதேச அணி முதலில் துடுப்பாடியது. லித்தன் தாஸ் 14 ஓட்டங்களும், சவுமியா சர்க்கார் 20 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.
பின்னர் வந்த ஷாண்டோ 3 ஓட்டங்களில் வெளியேற, டௌஹித் ஹ்ரிடோய் மற்றும் மஹ்மதுல்லா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அமெரிக்கா அபார வெற்றி
இதன்மூலம் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் எடுத்தது. டௌஹித் ஹ்ரிடோய் 47 பந்துகளில் 58 ஓட்டங்களும், மஹ்மதுல்லா 31 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய அமெரிக்க அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோரி ஆண்டர்சன் 25 பந்துகளில் 34 ஓட்டங்களும், ஹர்மீத் சிங் 13 பந்துகளில் 33 ஓட்டங்களும் எடுத்தனர்.
அமெரிக்க அணி முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது.
Corey Anderson put in the work today to help #TeamUSA secure a win in the first T20i against Bangladesh! ?#USAvBAN #WeAreUSACricket ?? pic.twitter.com/m60F8ZKa01
— USA Cricket (@usacricket) May 21, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |