அமெரிக்க அணி 122 ரன்னுக்கு ஆல்அவுட்! எதிரணியை 65க்கு சுருட்டி மிரட்டல் வெற்றி
ஓமான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அமெரிக்க அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
122 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
அல் அமெரிட் மைதானத்தில் நடந்த போட்டியில் அமெரிக்கா மற்றும் ஓமான் அணிகள் மோதின.
முதலில் ஆடிய அமெரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, 35.3 ஓவரில் 122 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
Halfway there…⏳#TeamUSA have set the target! 🎯
— USA Cricket (@usacricket) February 18, 2025
Now onto our bowlers….#USAvOMAN pic.twitter.com/GuwcKi7M3h
கடைசி வரை களத்தில் நின்ற மிலிந்த் குமார் 47 (82) ஓட்டங்கள் எடுத்தார். ஷகீல் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கென்ஜிகே மிரட்டல்
பின்னர் களமிறங்கிய ஓமான் அணியில் ஹம்மத் மிர்ஸா ஓரளவு நின்று ஆட, 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை அணி இழந்தது.
அதன் பின்னர் நோஸ்துஷ் கென்ஜிகேவின் சுழலில் சிக்கிய ஓமான் அணி, அடுத்த 8 ஓட்டங்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 65 ஓட்டங்களுக்கு சுருண்டது.
USA WIN! 🤩🔥#TeamUSA win their 4th and final CWC League 2 match against the hosts! 💪#CWCL2 | #USAvOMAN pic.twitter.com/0cUp3YpnRM
— USA Cricket (@usacricket) February 18, 2025
இதன்மூலம் அமெரிக்க அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கென்ஜிகே 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
What a performance by Nosthush Kenjige today with 5 wickets for #TeamUSA! 🤩🔥 pic.twitter.com/zSKXugWWre
— USA Cricket (@usacricket) February 18, 2025
Our Player of the Match today for his figures against Oman! Congratulations, Milind! 🤩👏#USAvOMAN | #CWCL2 pic.twitter.com/RQsCf2uaoG
— USA Cricket (@usacricket) February 18, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |