250 விளையாட்டு வீராங்கனைகளை துஷ்பிரயோகம் செய்த மருத்துவர்: சிறையில் சந்தித்த பயங்கரம்
அமெரிக்காவில், 250 தடகள வீராங்கனைகளை துஷ்பிரயோகம் செய்த மருத்துவர், சிறையில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டார்.
250 தடகள வீராங்கனைகளை துஷ்பிரயோகம் செய்த மருத்துவர்
அமெரிக்க பெண்கள் தேசிய தடகள அணியின் மருத்துவராக இருந்தவர் லாரி நாஸர் (Larry Nassar). பெண் பிள்ளைகளை கவனித்துக்கொள்ளவேண்டிய நிலையில் இருந்த நாஸர், அந்த வாய்ப்பை தவறாகப் பயன்படுத்திக்கொண்டு, வயது வித்தியாசமில்லாமல் பெண் பிள்ளைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திவந்துள்ளார்.
Credit: AP:Associated Press
பிரபல தடகள வீராங்கனைகள் சிலர் விடயத்தை வெளியே கொண்டு வர, நாஸரின் அயோக்கியத்தனம் வெளியே தெரியவந்தது.
சாட்சியமளித்த பிள்ளைகள் கதறியழ, கைது செய்யப்பட்ட நாஸருக்கு 2017ஆம் ஆண்டு, முதலில் 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுபிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது பின்னர் வெளியே வர, 2018ஆம் ஆண்டு, மீண்டும் அவருக்கு 40 முதல் 175 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
Credit: Federal Bureau of Prisons
ஒரு மாதத்திற்குப் பிறகு, மேலும் சில குற்றச்சாட்டுகள் நிரூபணமாக, மேலும் 40 முதல் 125 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது நாஸருக்கு.
கத்தியால் சரமாரியாக தாக்கிய நபர்
நாஸர் ப்ளோரிடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம், அவருடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சக கைதி ஒருவர் நாஸரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
மார்பிலும் முதுகிலும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. திங்கட்கிழமை வாக்கில் அவரது நிலைமை சீரானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். நாஸரைக் கத்தியால் குத்தியவர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |