நேட்டோ சிதையாமல் இருக்க நான் தான் காரணம்! டிரம்பின் கருத்தால் புதிய சர்ச்சை
நேட்டோ அமைப்பு உயிர்ப்புடன் இருப்பதற்கு நான் தான் காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பெருமிதம் கொண்டுள்ளார்.
நேட்டோ குறித்து டிரம்ப் கருத்து
செவ்வாய்க்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நேட்டோ எனப்படும் வடக்கு அட்லாண்டிக்கு ஒப்பந்த அமைப்பு(NATO) இன்று உயிர்ப்புடன் இருப்பதற்கு தன்னுடைய தலைமை தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
தன்னுடைய ஜனாதிபதி பதவி காலத்தின் போது தன்னுடைய தலையீடு இல்லையென்றால் இந்த நேட்டோ கூட்டணி எப்போதோ காணாமல் போயிருக்கும் என்று உரிமை கோரியுள்ளார்.

நேட்டோவிற்கு எந்தவொரு தனிநபரோ அல்லது ஜனாதிபதியோ தன்னை விட அதிக பலம் சேர்க்கவில்லை, அதே நேரத்தில் மற்ற உறுப்பு நாடுகளுக்கு அழுத்தம் தான் அழுத்தம் கொடுக்காவிட்டால் இந்த நேட்டோ கூட்டணி முற்றிலுமாக சரிந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெறும் இராஜதந்திர பதற்றங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி டிரம்பின் இந்த கருத்து வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |