பிரபல நாட்டில் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவந்தது அமெரிக்கா! ஜனாதிபதி ஜோ பைடன் முக்கிய அறிவிப்பு
ஏமனில் இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவதாக ஜனாபதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
பதவியேற்ற பின்னர் தனது முதல் வெளியுறவுக் கொள்கை உரையின் போது ஏமனில் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பைடன் கூறினார்.
அதே நேரத்தில், சவுதி அரேபியா அதன் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் மக்களையும் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து உதவுவோம் என்று பைடன் கூறினார்.
சவுதி அரேபியா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களால் குறிவைக்கப்படுகிறது என பைடன் குறிப்பிட்டார்.
மேலும், ஏமனுக்கான சிறப்பு தூதராக Timothy Lenderking-ஐ நியமிப்பதாகவும் பைடன் அறிவித்தார். Lenderking முன்பு ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் மூத்த அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டை பாதுகாக்க அமெரிக்க ஆதரவளித்து உதவுவதாக பைடன் அறிவித்துள்ளதை சவுதி அரேபியா வரவேற்றுள்ளது.