ரஷ்யா-அமெரிக்காவிடம் சிக்கி தவிக்கும் இந்தியா! பொருளாதார தடை வருமா?
இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து இன்னும் எந்த ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என்று அமெரிக்க கூறியுள்ளது.
ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதால், ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ள இந்திய மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில், அமெரிக்காவில் காட்சா என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதாவது, இந்த சட்டத்தின்படி அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நாடுகளுடன் இராணுவ மற்றும் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க முடியும். திட்டமிட்டபடி ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க இந்தியா ஏற்கனவே முடிவு செய்துள்ளது.
இதனால், இந்த பிரச்னை தொடர்பாக அமெரிக்க எம்.பி.க்களிடையே பொருளாதார தடை கொள்கைக்கான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பிரதிநிதியான ஜேம்ஸ் ஓபிரையன் விளக்கம் அளித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ரக ஏவுகணைகள் வாங்கியதாக துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அதே நேரத்தில் நம் நட்பு நாடான இந்தியா மீதும் தடை விதிக்கப்படுமா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்ள இந்தியா வலுவாக இருப்பது முக்கியம். சீனா, பாகிஸ்தானுடன் எல்லை பிரச்னைகளை இந்தியா சந்தித்து வருகிறது.
தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக இந்த ஏவுகணைகளை இந்தியா வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா நீண்ட காலமாக ரஷ்யாவிடம் இருந்தே ஆயுதங்களை வாங்கி வருகிறது.
இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஏவுகணைகள் வாங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை.
பல விஷயங்களை ஆராய்ந்தே இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022