இலங்கையில் திடீரென இறங்கிய அமெரிக்க போர் விமானங்கள்! இந்தியாவிற்கு ஆபத்தா? (காணொளி)
அமெரிக்காவின் போர் விமானங்கள் இலங்கையில் தரையிறங்கியதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது.
திடீர் திடீரென்று தரையிறங்கிய போர் விமானங்கள்
கடந்த டிசம்பர் மாதம் 7ஆம் திகதி, அமெரிக்க இராணுவத்தின் C-130 சூப்பர் ஹெர்குலஸ் என்கிற பாரிய இராணுவ விமானங்கள், இலங்கையின் முக்கியமான 7 விமானத் தளங்களில் திடீர் திடீரென்று தரையிறங்கின.
கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மற்றும் அம்பாறை, அனுராதபுரம், யாழ்ப்பாணத்தின் பலாலி, திருகோணமலை போன்ற விமான நிலையங்களில் இவை தரையிறங்கியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இலங்கையின் அரசாங்கம் மற்றும் படைத்துறையின் அழைப்பை ஏற்றே அந்த விமானங்கள் தரையிறங்கியதாக, இலங்கைக்கான அமெரிக்காவின் தூதராலயம் தெரிவித்தது.
ஆனால், அவற்றின் தரையிறக்கம் குறித்து கூறும் இலங்கை ஊடகங்கள், அதற்கான அனுமதி கூறல்கள் எதையும் அரசாங்கத்திடம் முறையாக முன்வைக்காமல், வெறும் குறுகிய நேர முன்னறிவிப்புகளை மாத்ரம் அந்த தரையிறக்கங்கள் இடம்பெற்றதாக கூறுகின்றன.
அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அதன் ஒரு இராணுவத்தளமாக விரைவில் மாறிவிடும் என்று கூறப்படுவதில், எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.
ஆனால், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு பாதகத்தை ஏற்படுத்தாதா என்ற கேள்வி எழுகிறது.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |