வெட்கப்பட ஒன்றும் இல்லை! மனைவியிடம் தாய்ப்பால் குடிக்கும் கணவன்: கொட்டி கிடக்கும் நன்மைகள்
அமெரிக்காவில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியிடம் இருந்து தாய் பாலை குடிக்கும் பழக்கத்தை கொண்டு இருப்பதோடு அதில் நன்மைகள் கொட்டி கிடப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
மனைவியிடம் தாய் பால் குடிக்கும் கணவன்
கடந்த 2017ம் ஆண்டு முதல் அலெக்சாண்டர் என்ற அமெரிக்காவை சேர்ந்த நபர் தன்னுடைய மனைவி ரேச்சல் பெய்லியிடம் இருந்து தாய்ப்பால் குடித்து வருகிறார்.
இதன் மூலம் அவர்களது திருமண உறவு ஆரோக்கியமான முறையில் இருப்பதாக தம்பதி தெரிவித்துள்ள விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக மனைவி ரேச்சல் பெய்லி தெரிவித்துள்ள தகவலில், இது கொஞ்சம் தடை செய்யப்பட்ட விஷயம் தான், ஆனால் நாங்கள் இதனை அவ்வளவு மோசமாக கருதவில்லை வெட்கமும் படவில்லை.
iStock.com / szeyuen
தனது ஆறு வயது குழந்தை ஆர்யாவுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது என்னுடைய கணவர் அலெக்சாண்டர் தாய்ப்பால் குடிக்கத் தொடங்கினார். இதன் மூலம் அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு சளி பாதிப்புகள் ஏற்படவில்லை, மேலும் அவருடைய தோல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது என்று பலரும் கூறுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
முதல் தருணம்
நாங்கள் ஒருமுறை சுற்றுலா சென்று இருந்த போது என்னுடைய மார்பக பம்பை எடுத்து செல்ல மறந்து விட்டேன், இதனால் என்னுடைய மனநிலை இரண்டு நாட்களாக மிகவும் மோசமாக இருந்தது.
நோய் தொற்று எதுவும் ஏற்பட்டு விடுமோ என்று பயந்தேன், அப்போது தான் என்னுடைய மார்பக வலியை குறைப்பதற்காக என்னுடைய தாய்ப்பாலை அவரே குடித்து முயற்சித்து பார்க்கலாம் என்று தெரிவித்தார்.
முதலில் சற்று பதற்றமடைந்தோம், ஆனால் என்னுடைய கணவர் தாய்ப்பாலை குடித்தது எனக்கு கொஞ்சம் நிவாரணமாக இருந்தது.
அத்துடன் இது எங்களுக்கிடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்க வைத்தது, அது நடந்திராவிட்டால் ஒருபோதும் இப்போது இருக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்திருக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |