நரகத்தில் அவனுக்கு சிறப்பான இடம் உண்டு! வெளிநாடொன்றில் கொல்லப்பட்ட இந்திய குடும்பம் தொடர்பில் புதிய தகவல்
அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 8 மாதக் குழந்தை, அவரது பெற்றோர் உள்பட நான்கு பேரும் கடந்த வாரம் திங்கள்கிழமையன்று கடத்தப்பட்டதாக தகவல் கிடைக்கப்பெற்று காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இரண்டாவது நாள் அவர்கள் கடத்தப்பட்ட பகுதிக்கு அருகே நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இது கலிஃபோர்னியாவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. எட்டு மாத பெண் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கௌர் (27), ஜஸ்தீப் சிங் (36), உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் திங்கள்கிழமையன்று வடக்கு கலிஃபோர்னியாவின் மெர்சிட் கௌண்டியில் உள்ள ஒரு நிறுவனத்திலிருந்து கடத்தப்பட்டனர்.
AP
இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய நபர் Jesus Salgado சில தினங்களுக்கு முன்னர் கைதான நிலையில் நேற்று அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளின் கீழ், Salgado பரோலில் விடுதலை செய்ய வாய்ப்பில்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Salgado குறித்து காவல்துறை அதிகாரி ஷெரிஃப் வார்ங்கே கூறுகையில், நரகத்தில் நிச்சயம் அவனுக்கு ஒரு சிறப்பான இடம் தயாராக இருக்கும் என்று கூறினார்.