ஒலிம்பிக் வரலாற்றிலே அதிக தங்கப்பதக்கம் வைத்திருக்கும் நாடு எது தெரியுமா? அசர வைக்கும் அதிகாரப்பூர்வ தகவல்
உலக விளையாட்டு அரங்கில் பெரிய எதிர்ப்பார்ப்பு கொண்ட விளையாட்டு திருவிழாவாக ஒலிம்பிக் போட்டி பார்க்கப்படுகிறது.
விளையாட்டு வீரர்கள் பலரின் கனவும் இந்த ஒலிம்பிக் தான், இந்த ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் நீங்கள் பதக்கத்தை வாங்கிவிட்டால், அது உலகில் இருக்கும் அனைத்து நாடுகளில் பேசப்படும்.
அதன் பின் அவர்களின் வாழ்க்கையே மாறிவிடும். அந்த அளவிற்கு இந்த ஒலிம்பிக் போட்டியில் கொடுக்கப்படும் பதக்கங்கள் முக்கியத்துவம் கொண்டது. இந்த ஒலிம்பிக் போட்டியில் நடத்தப்படும் போட்டிகளில் முதலில் வருபவரும் தங்கப்பதக்கம், இரண்டாவது வருபவருக்கு வெள்ளி, மூன்றாவது வருபவருக்கு வெண்கலம் என்று கொடுக்கபடும்.
அப்படி இந்த ஒலிம்பிக் வரலாற்றிலே தனி ஒருவனாக அமெரிக்காவைச் சேர்ந்த Michael Phelps என்பவர் மொத்தம் 23 தங்கப்பதக்கங்களை வென்று ஒரு மிகப் பெரிய பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளார்.
நீச்சல் வீரரான இவர், கடந்த 2000-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 15 வயதில் அறிமுகமானாா் ஒட்டுமொத்தமாக 28 ஒலிம்பிக் பதக்கங்களை கைப்பற்றினாா். மேலும் அதிக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற நீச்சல் வீரா் என்ற சாதனையும் பெல்ப்ஸ் வசம் உள்ளது.
பெல்ப்ஸின் 23 தங்கப் பதக்க சாதனையை எதிா்காலத்திலும் எவராலும் தகா்க்க முடியாது என்ற நிலையே இப்போது வரை தொடருகிறது.
இவருக்கு அடுத்த இடத்தில், சோவியத் யூனியன் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை லாரிசா லத்தினினா 9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் உள்ளார்.
ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்ற நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை பங்கேற்ற 27 ஒலிம்பிக்கில்(2021-ஆம் சேர்க்கப்படவில்லை), 1027 தங்கம், 800 வெள்ளி, 704 வெண்கலம் என, 2531 பதக்கங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.