40 நாட்களுக்கு மேல் நீடிக்கும் போர்! ரஷ்யாவின் கொட்டத்தை அடக்க முக்கிய முடிவு
ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்க வியூகம் வகித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் சண்டை 40 நாட்களை கடந்து நடந்து கொண்டிருக்கிறது. போரில் சற்றும் சமரசம் செய்து கொள்ளாத ரஷ்யாவின் கொட்டத்தை அடக்க அமெரிக்கா புதிய தடைகளை விதிக்க வியூகம் வகுத்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் நிருபர்களிடம் கூறுகையில், ரஷ்யா தான் நினைத்ததுபோல் ஒட்டுமொத்த உக்ரைனையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.
அதனால், தற்போது கிழக்கு, தெற்கு பகுதிகளில் தனது இலக்கை நிர்ணயித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்யா மீது இன்னும் அதிகப்படியான தடைகளை விதிக்க இருக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்த அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாகவும், உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விளாடிமிர் புடின் மீது போர்க் குற்ற விசாரணையைத் தொடங்க அனைத்து நடவடிக்கைளை எடுக்கவும் பைடன் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் மூலம் தகவல் கசிந்துள்ளது.