எனக்கு 17 வயது ஆகிறது! பொய் கூறி 14 வயது சிறுமியுடன் ஆன்லைனில் நட்பான நபர்... அவனை நேரில் சந்தித்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
அமெரிக்காவில் தன்னை 17 வயது சிறுவன் போல பொய்யாக காட்டி ஆன்லைனில் சிறுமியுடன் நட்பான இளைஞன் அவரை நேரில் வரவழைத்து பாலியல் தாக்குதல் நடத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான்.
கிறிஸ்டியன் மைக்கேல் (23) என்ற இளைஞன் தனக்கு 17 வயது ஆகிறது என கூறி 14 வயது சிறுமியுடன் ஆன்லைனில் நட்பானான்.
பின்னர் சிறுமியிடம் மயக்கும் விதத்தில் பேசி அவரை நேரில் சந்திக்க அழைத்தான். தனது வயதுடையவர் தானே என சிறுமியும் சென்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் 23 வயதான மைக்கேல் சிறுமியை சீரழித்துள்ளான். இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் மைக்கேலை அவன் வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிசார் கூறுகையில், மைக்கேல் தொடர்பிலே அல்லது அவனால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாராவது இருந்தாலோ தங்களை தொடர்பு கொண்டு பேசலாம் என தெரிவித்துள்ளனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        