கணவன் உயரம் குறித்து கவலை கொண்ட மனைவி: 3 அங்குலம் வளர 1,30,000 பவுண்டுகள் செலவு செய்த நபர்!
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் மூன்று 3 இன்ச் வரை உயரம் கூட்டுவதற்காக ராய் கான் என்பவர் 1,30,000 பவுண்டுகள் வரை செலவழித்துள்ளார்.
மனித உடல் உயரம் கூட்டும் சிகிச்சை
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ராய் கான் என்பவர் ஐந்து அடி ஆறு அங்குலத்தில் இருந்த நிலையில், தனது உடல் உயரத்தை மூன்று அடிகள் வரை உயர்த்தி கொள்வதற்காக 1,30,000 பவுண்டுகள் வரை செலவழித்துள்ளார்.
இதற்காக அவரது இரண்டு தொடை எலும்புகளும் உடைக்கப்பட்டு அதில் உலோக நகங்கள் சேர்க்கப்படும் வலிமிகுந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த உயரம் அதிகரிப்பு சிகிச்சை செய்து கொண்ட 68 வயதான ராய் கான் என்பவர் தற்போது ஐந்து அடி ஒன்பது அங்குலத்திற்கு உயர்ந்துள்ளார்.
அறுவை சிகிச்சையின் அனுபவம்
அறுவை சிகிச்சை காலம் நீண்ட நாட்கள் இல்லை, ஆனால் அதிலிருந்து மீளும் செயல்முறை நீண்டதாக இருந்தது. இதற்கு பல மாதங்கள் ஆகும் என கான் தெரிவித்துள்ளார்.
குறைவான உயரம் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக எனக்கு இல்லை, ஆனால் நான் சிறு வயது முதலே குள்ளமாக இருப்பதை உணர்ந்து வந்துள்ளேன், அதை சரி செய்ய தக்க தருணத்துக்கு காத்து கொண்டு இருந்தேன், இப்போது தான் சரியான தருணம் என உணர்ந்த பின் இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
GQ/Roger Kisby/Redux Pictures
அதே நேரம் நான் குட்டையாக இருப்பது குறித்து என்னை போலவே எனது மனைவியும் கவலை அடைந்தால், அவளும் என்னை போலவே விருப்பம் கொண்டு இருந்தால், அவளது இந்த கவலை நிச்சயமாக என்னை குறித்து தானே தவிர வேறு யாருக்காகவும் இல்லை என ராய் கான் குறிப்பிட்டுள்ளார்.
3 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை
இந்த அறுவை சிகிச்சை கால்களை நீட்டுதலில் நிபுணத்துவம் பெற்ற அழகுசாதன அறுவை சிகிச்சை நிபுணரான கெவின் டெபிபர்ஷாத் மேற்கொண்டார்.
இந்த உயர நீட்டிப்பு அறுவை சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு சுமார் ஒரு மில்லிமீட்டர் எடுக்கும், அதனடிப்படையில் இந்த சிகிச்சை நிறைவடைய மாதங்கள் கூட செலவாகும் என டாக்டர் கெவின் டெபிபர்ஷாத் தெரிவித்துள்ளார்.
நோயாளிகள் 3, 4, 5 அல்லது 6 அங்குலங்கள் வளர விரும்புகிறாரா என்பதைப் பொறுத்து, $70,000 முதல் $150,000 வரை செலவாகும் என்று தெரிவித்துள்ளார்.