பிடிவாதம் வேண்டாம்... ஈரானுக்கு 100 பில்லியன் டொலர் வழங்க முன்வந்த அமெரிக்கா

Iran Strait of Hormuz
By Arbin Jul 05, 2026 03:16 AM GMT
Report

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிப்பதில் ஈரான் காட்டி வரும் பிடிவாதத்தைக் கைவிடுவதற்கு ஈடாக, அமெரிக்கா அந்நாட்டிற்கு 100 பில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது.

நிராகரித்த ஈரான்

வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள 100 பில்லியன் டொலர் மதிப்பிலான ஈரானிய நிதியில் ஒரு பகுதியை விடுவிப்பதாக அளிக்கும் வாக்குறுதியைத் தங்கள் முக்கிய பேராயுதமாகக் கொண்டு, ஈரானின் பிடிவாதத்தைக் குறைப்பதற்கான வழிகளை அமெரிக்காவும் ஓமனும் ஆராய்ந்து வரும் சூழலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

பிடிவாதம் வேண்டாம்... ஈரானுக்கு 100 பில்லியன் டொலர் வழங்க முன்வந்த அமெரிக்கா | Usa Offered Iran 100 Billion

ஆனால், அமெரிக்காவின் இந்த 100 பில்லியன் டொலர் வாக்குறுதியை ஈரான் நிராகரித்ததாகவே தகவல் கசிந்துள்ளது. இதனிடையே, அந்த நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இல்லை, மாறாக ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று ஈரானின் பேச்சுவார்த்தையாளரும் வெளிவிவகார துணை அமைச்சருமான காசெம் கரிபாபாடி நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஈரானால் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடத்தைப் பின்பற்றாத எந்தவொரு கப்பலும் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

சுட்டெரிக்கும் வெப்பம்... உலகக் கிண்ணத்தின் முக்கிய ஆட்டம் ஒன்று ரத்தாகும் அபாயம்

சுட்டெரிக்கும் வெப்பம்... உலகக் கிண்ணத்தின் முக்கிய ஆட்டம் ஒன்று ரத்தாகும் அபாயம்

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஒருங்கிணைந்த தாக்குதல் மற்றும் நெருக்கடியைத் தொடர்ந்து, பாதுகாப்பு போன்ற சேவைகளுக்கான செலவை ஈடுகட்ட, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் ஒவ்வொரு கப்பலுக்கும் கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது.

போருக்கு முன்னர், ஹார்முஸ் நீரிணையில் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் எந்த நாட்டின் கப்பல்களும் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது, போருக்கு பின்னர் அப்படியான சலுகைகளை எந்த நாடும் எதிர்பார்க்க வேண்டாம் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பிடிவாதம் வேண்டாம்... ஈரானுக்கு 100 பில்லியன் டொலர் வழங்க முன்வந்த அமெரிக்கா | Usa Offered Iran 100 Billion

ஓமான் மாற்று வழி

இக்கட்டணங்கள் மூலம் ஈரானுக்கு ஆண்டுக்கு 40 பில்லியன் டொலர் வருவாய் கிடைக்கக்கூடும்; ஆனால், இத்திட்டங்களை அமெரிக்காவும் வளைகுடாப் பிராந்திய அண்டை நாடுகளும் நிராகரித்துவிட்டன.

இந்த நிலையில், நீரிணையின் தெற்குப் பகுதியின் மீது உரிமைகளைக் கொண்டுள்ள ஓமானிடமிருந்து ஒரு மாற்று வழி முன்வைக்கப்பட்டது; இதன்படி, கடல்சார் சேவைகளுக்கான கட்டணத்திற்குப் பதிலாக விருப்பத்தின் பேரில் நன்கொடைகள் வழங்கலாம்.

பிடிவாதம் வேண்டாம்... ஈரானுக்கு 100 பில்லியன் டொலர் வழங்க முன்வந்த அமெரிக்கா | Usa Offered Iran 100 Billion

ஆனால், எந்த நாடும் அப்படியான ஒரு நன்கொடை வழங்கும் முடிவுக்கு வராது எனக் கூறி, ஈரான் அந்த ஆலோசனையை எதிர்த்தது. மட்டுமின்றி, ஈரானின் அனுமதியின்றி ஓமன் மாற்றுப் போக்குவரத்துப் பாதையை வெளியிட்ட நிலையில், ஈரான் கடந்த வாரம் கப்பல் போக்குவரத்தின் மீதான தனது தாக்குதல்களை மீண்டும் தொடங்கியது.

இதற்கு அமெரிக்கா தரப்பில் இருந்து பதிலடித் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. போருக்கு முன்பு ஹார்முஸ் நீரிணை வழியாக தினமும் 100க்கும் மேற்பட்ட கப்பல்கள் சென்று வந்தன, ஆனால் புதன்கிழமை நிலவரப்படி இந்த எண்ணிக்கை 43 ஆகக் குறைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US