இக்கட்டான சூழலில் உக்ரைனுக்கு உதவிகரம் நீட்டும் அமெரிக்கா! வெளியானது அதிமுக்கிய அறிவிப்பு
உக்ரைனுக்கு உடனடி தேவைகளுக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கவுள்ளது.
உக்ரைனுக்கு உடனடி இராணுவ உதவியை வழங்கும் ஆணையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்து போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா மூன்றாம் நாளாக போரிட்டு வருகிறது. இந்த நிலையில் உக்ரைனுக்கு உடனடி தேவைகளுக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கவுள்ளது.
Tonight President Biden has instructed Secretary of State Blinken to release up to $350 million in immediate support to Ukraine's defense, according to a new memo released by the White House.
— Kaitlan Collins (@kaitlancollins) February 26, 2022
அதன்படி உக்ரைனின் பாதுகாப்புக்கு உடனடி ஆதரவாக $350 மில்லியன் வரை விடுவிக்க வெளியுறவுத்துறை செயலர் பிளிங்கனுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.
இதோடு $250 மில்லியன் மதிப்பில் இதர உதவிகள் வழங்கவும் ஜோ பைடன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள புதிய குறிப்பில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.