20 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டவர்களுக்கு எல்லைகளை மீண்டும் திறக்கும் உலக வல்லரசு நாடு!
20 மாதங்களுக்கு பிறகு உலக வல்லரசு நாடான அமெரிக்கா, இன்று முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு அதன் எல்லைகளை திறந்துள்ளது.
எனினும், பெரும்பாலான வெளிநாட்டு பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடுப்பூசி போட்டதற்கான ஆவணம் முக்கிய தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்திற்கு டிஜிட்டல் மற்றும் காகித ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும், மேலும் தடுப்பூசி அட்டைகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுடன் பயணம் செய்யும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டதற்கான ஆதார தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
திங்கட்கிழமை முதல் விமானம் மூலம் அமெரிக்காவுக்கு வரும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் மற்றும் புறப்படுவதற்கு 3 நாட்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
அமெரிக்க பயணிக்கும் பயணிகள் குறித்த ஆவணங்களை வைத்துள்ளார்களா என்பதை விமான நிறுவனங்கள் சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரை வழியாக நுழையும் பயணிகளிடம் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் ஆவணங்களைச் சரிபார்ப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணிகளுக்கு சில நகரங்களில் உள்ளூர் கட்டுப்பாடுகள் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, ஹவாய், இல்லினாய்ஸ், நியூ மெக்சிகோ, நெவாடா, ஓரிகான் மற்றும் வாஷிங்டனில் முகக்கவசம் கட்டாயமாக உள்ளன.
வாஷிங்டன், டிசி மற்றும் Puerto Rico-வில் உட்புற பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்.
நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட சில நகரங்களில், உணவகங்கள் உட்பட உட்புற பொது இடங்களுக்குள் நுழைய தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.