ஒரு நாளைக்கு 1.3 மில்லயன்! தடுப்பூசி திட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டிய அமெரிக்கா!
பாதிப்பு எண்ணிக்கையை விட அதிக மக்களுக்கு தடுப்பூசி வழங்கி அமெரிக்கா அதன் தடுப்பூசி திட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
உலகிலேயே மிகக் கொடூரமான அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா.
அமெரிக்காவில் கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 26.5 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 443,000க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 6 வாரங்களாக நாடு உழுவதும் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்திவருகிறது.
தடுப்பூசி செயல்திட்டத்தில் ஆரம்ப நாட்களில் மிகவும் தடுமாறினாலும், சமீப நாட்களாக உலகின் எந்த நாட்டையும் விட அமெரிக்கா தினசரி வேகத்தில் அதிக தடுப்பூசிகளை நிர்வகித்து வருகிறது. ஒரு நாளைக்கு சுமார் 1.3 மில்லயன் தடுப்பூசிகளை வழங்கிவருகிறது.
இந்நிலையில், திங்கட்கிழமையின் நிலவரப்படி 26.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் தற்போதைய பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகமாகும்.
அமெரிக்காவில் அமேரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் 1.8% மக்கள் முழுமையாக தங்கள் தடுப்புசிகளை பெற்றுள்ளதாகவும், கிட்டத்தட்ட 7.8% மக்கள் தங்கள் முதல் டோஸை பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.