புடினின் இல்லத்தை உக்ரைன் தாக்கவில்லை - அமெரிக்கா
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லங்களில் ஒன்றை உக்ரைன் தாக்கவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புடினின் இல்லம்
வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) வால்டாய் உள்ளது.
இதன் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு திங்கள் காலை வரை உக்ரைன் பாரிய அளவிலான ட்ரோன் நடவடிக்கையை நடத்தியதாக ரஷ்யா கூறியது.
ஆனால், புடினின் இல்லத்தின் மீது எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்று CIA மதிப்பிட்டதாக, பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிஐஏ
அவரது கூற்றுப்படி, உக்ரேனியப் படைகள் வால்டாய்க்கு வெகு தொலைவில் உள்ள நோவ்கோரோட் பிராந்தியத்தில் ஒரு இராணுவ வசதியைத் தாக்க முயன்றன.
இதுகுறித்து கருத்து தெரிவிக்க சிஐஏ மறுத்துவிட்டதாகவும், வெள்ளை மாளிகையில் இருந்து உடனடி பதில் எதுவும் இல்லை என்றும் WSJ கூறியது.
முன்னதாக, அமெரிக்காவைப் போல் உக்ரைனும் ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |